அனுபவமும் நம்பகத்தன்மையும் கொண்ட ஈடன் ஒரு சிறப்புக் கூட்டாளி. மிகவும் தரம் வாய்ந்த இத்தாலி மற்றும் பன்னாட்டு இயற்கைக் கல்லை கண்டறியவும் வாங்கவும் நாங்கள் எமது வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கிறோம்; தரம், விலை, அழகுத்தன்மை மற்றும் முடிவுகள் ஆகியவற்றுக்கு இடையே சமச்சீர்மை நிலவும் வகையில் அவர்களுக்கு நாங்கள் உதவுவோம்.

எமது நீண்ட அனுபவத்தால் கல்லெடுக்கும் கற்சுரங்கத்தின் பன்னாட்டு வலையமைப்பை நாங்கள் கட்டமைத்து, பன்னாட்டுச் சந்தைகளிலும் பங்கேற்றுள்ளோம்: யுனைட்டெட் கிங்டம், இந்தியா, ஆசியா, மத்தியக் கிழக்கு நாடுகள், வட ஆப்பிரிக்கா, வடக்கு மற்றும் தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா.
ஈடனில் அடங்கியுள்ளவை: சலவைக்கல், சுண்ணாம்புக்கல், கருங்கல், சுண்ணாம்புக் காரைப் படிவு, ஓரளவு அரியவகை மதிப்புள்ள கற்கள், ஜல்லிக் கற்கள், கரடுமுரடான மற்றும் நேர்த்தியான பாளங்கள் மற்றும் ஓடுகள் வடிவத்தில் படிகக் கற்கள் ஆகியவை. வாடிக்கையாளர்கள், வழங்குநர்கள், மெருகிடுவோர் மற்றும் பாளம் தயாரிப்போர் ஒன்றிணையும் இடமே ஈடன் ஆகும்.குறிப்பிடத்தகுந்த மதிப்பு மிக்க மற்றும் அழகிய சில சலவைக்கல் மற்றும் கருங்கல் வகைகளை வழங்குவது ஈடன்.